மாவட்ட மற்றும் பிரதேச மட்ட முதியோர் சங்கங்களின் கலந்துரையாடல் இன்று (17.01.2024)நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முதியோர் நலன்கள், சங்கங்களின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.இதில் சமூக சேவை உத்தியோகத்தர், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட மட்ட முதியோர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், பிரதேச மட்ட முதியோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிறிசலிஸ் நிறுவனத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுகின்ற காலநிலை மாற்றத்திற்கு தாங்குதிறன் மிக்க சமூகங்களை கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின் 4 கிராம அலுவலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களின் தேவைப்பாட்டினை உறுதி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (11.01.2024) உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எமது பிரதேச செயலகத்தில் 19.01.2022 தொடக்கம் 09.01.2024 வரை பிரதேச செயலாளராக கடமையாற்றி வட மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்று செல்லும் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பிரதேச செயலாளர் திரு சி.ச.கிருஷ்ணேந்திரன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் சேவை நலன் பாராட்டு விழாவும் இன்று(09.01.2024) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

டெங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 09.01.2024 அன்று கிளாலி கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர், இராணுவம், பொலிஸார் என பலரும் சேர்ந்து அப்பிரதேசம் முழுவதும் வீடு விடாக சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் டெங்கு பரவும் இடங்கள் பற்றிய விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச மட்ட டெங்குக் கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில்( 08.01.2024 )இடம்பெற்றது. இதில் நிர்வாக உத்தி​யோகத்தர்,பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள்,வர்த்தக சங்கம்,கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள்,தென்னைப் பயிர்ச்செய்கை சமாச உத்தியோகத்தர்கள்,தபாலக உத்தியோகத்தர்கள்,வௌிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இக் கூட்டத்தில் டெங்கு நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைககள் பற்றி ஆராயப்பட்டது.

Scroll To Top