இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் 2024 பெப்ரவரி 04 ஆம் திகதி இன்று காலை 8.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு உதவி பிரதேச செயலாளர் அவர்கள் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து "சுவதரனி மருத்துவச் செய்கை வாரம்" என்ற தொனிப்பொருளுக்கமைய எமது பிரதேச செயலக வளாகத்தில் மருத்துவ செடிகள் நடும் நிகழ்வும் சிரமதானமும் இடம்பெற்றது.

இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து "குழந்தைகள் சுதந்திரம்"எனும் தலைப்பில் ஓவியப் பயிற்சிப் பட்டறை 01/02/2024 அன்று உதவிப் பிரதேச செயலர், நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் வளவாளராக சித்திரப் பாட ஆசிரியர் து.குமரநாதன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் அழகிய சிறுவர் கழக மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வெளிக்களப்பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தெரிவு செய்வதற்கான பிரதேச மட்ட கலந்துரையாடலானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 31.01.2024 மாலை 4 மணிக்கு கௌரவ கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழ தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்,மற்றும் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர்,ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் மற்றும் அலுவலர்கள்,கிராமஅலுவலர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுவதரனி மருத்துவ செய்கை வாரம்" என்னும் பெயரில் 01.02.2024 தொடக்கம் 07.02.2024 வரையிலான நிகழ்வுகளின் ஆரம்பமாக இன்று (01.02.2024) மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

டெங்கு பற்றிய விழிப்புணர்வு  நிகழ்வு 17.01.2024  , 18.01.2024  திகதிகளில் கோவில்வயல் மற்றும் புலோப்பளை மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளில்  இடம்பெற்றது.

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்களுடன்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொலிசார், இராணுவம்  என பலரும் சேர்ந்து அப்பிரதேசங்கள்  முழுவதும் வீடு விடாக சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் டெங்கு  பரவும்  இடங்கள் பற்றிய விழிப்புணர்வும்  மேற்கொள்ளப்பட்டது.

Scroll To Top