யாழ்ப்பாணம்_கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக; தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபைக்கு LRC காணியினைக் கையளிக்கும் நிகழ்வும் இன்றைய தினம் (2019.11.07) நடைபெற்றது.

பன்னிரண்டு மாத வேலைத்திட்ட நிகழ்வின் கீழ் சுதந்திரவானம் தேசிய பட்டமேற்றுதல் நிகழ்வு - 2019.
பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் சிறுவர்கழகங்களின் பங்குபற்றுதலுடன் கடந்தவாரம் முகாவில் கிராமத்தில் சிறுவர்களின் குதூகலத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார விழா இன்றைய தினம் பிற்பகல் (2019.06.03) தலைவர்/ பிரதேசசெயலாளர் ப.ஜெயராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தேசிய முதியோர் செயலகத்தின் அனுசரணையுடனான முதியோர்களுக்கான மருத்துவமுகாம் கோவில்வயல், இத்தாவில், சோறன்பற்று, கச்சார்வெளி, கிளாலி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடந்த வாரங்களில் நடைபெற்றது. முதியோர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பளை பிரதேச செயலத்திற்குட்பட்ட மக்களுக்கானசமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று காலை (2019.06.03) பிரதேச செயலாளர் ப. ஜெயராணி தலைமையில் பளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கல்விஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பளை பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பங்குபற்றுதல்களுடன் மக்களுக்கான உரித்துப்படிவம் வழங்கிவைக்கப்பட்டது.
















