எமது தூரநோக்குமாற்றத்திற்குள்ளாகும் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார முறைமைகளுக்கேற்ப திறன் மிக்கதும் பயனுறுதி கொண்டதுமான பொதுச்சேவையை வழங்குதல். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எமது பணிநோக்குஅரசாங்க கொள்ளைகளுக்கு இணங்க வினைத்திறனும் பயனுறுதியுமான சேவையை வழங்குவதும் மக்களின் தேவையை அடிப்படையாகக்கொண்டு அவர்களின் பங்களிப்புடனான அபிவிருத்திச்செயற்பாடுகளினூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினையும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தல் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
எமது பிரதேச செயலாளர்கள் வரிசையில்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் வரலாறும் அதன் அமைப்பும்
இந்நாட்டின் சுதேச மக்களின் ஆரம்பகால ஆட்சியின் பின் இலங்கை அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டது.போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகள் உட்பட்டிருந்தது. ஒல்லாந்தர் ஆட்சியின் போது ஓர் நிர்வாக அமைப்பு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டது.அதன் பின் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பிரித்தானியாவில் காணப்படும் நிர்வாக அமைப்பு முறை இலங்கையிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 1815ன் பின் இலங்கையின் எல்லா பகுதிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்த போது இவ் அமைப்பு முறை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டதை காணமுடிகின்றது. எமது பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் முகமாலை, தம்பகாமம், புலோப்பளை, முள்ளிப்பற்று ஆகிய கோயில்பற்றுக்களும் அவற்றின் கீழ் பல இறை அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன. இவை பின் பிரித்தானிய துரைமார்களின் கீழ் செயற்படும் நான்கு உடையார் பிரிவுகளாக வகுக்கப்பட்டு இப் பிரதேசங்கள் நான்கும் நான்கு உடையார்களின் கீழான நிர்வாக அலகுகளாக மாற்றப்பட்டது. இதன் பின் மணியகாரன் அமைப்பின் கீழ் பச்சிலைப்பள்ளி, பெரியபச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய மூன்று பிரதேசங்களும் பச்சிலைப்பள்ளி மணியகாரன் நிர்வாகத்துக்குள் இருந்துள்ளது. இந்த பெருநிலப்பரப்பு பின்னர் பச்சிலைப்பள்ளி D.R.O பிரிவாக மாற்றம் பெற்றது. இங்கு 1942 இல் இவ் மணியகாரன் அமைப்பு செயற்பட்டதை அறியக்கூடியதாக உள்ளது.பின்னர் இவ் அமைப்பு முறை A.G.A பிரிவாகவும் அதன் பின்னர் பிரதேச செயலர் பிரிவாகவும் மாற்றம் பெறுவதைக் காணலாம். ஆரம்பத்தில் யாழ் மாவட்டத்தின் கீழ் இயங்கிய பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவு 1984ன் பின் கிளிநொச்சி மாவட்ட உருவாக்கத்தின் போது கிளிநொச்சி மாவட்டமாக மாறியது. ஆரம்பகால வன்னி குடியேற்றங்கள் பச்சிலைப்பள்ளி D.R.O பிரிவினாலேயே மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் பூநகரி D.R.O பிரிவும், கரைச்சி D.R.O பிரிவும் உருவாக்கப்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டன. பின்னர் கரைச்சியிலிருந்து துணுக்காய் கண்டாவளை A.G.A பிரிவுகள் பிரிந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டன.பின்னர் பச்சிலைப்பள்ளி A.G.A பிரிவில் இயங்கிய 11 G.S பிரிவுகளில் 04 G.S பிரிவுகள் (பெரிய பச்சிலைப்பள்ளியின் ) வடமராட்சி A.G.A பிரிவுடன் 1984 அளவில் இணைக்கப்பட்டது. 1989களின் பின் வடமராட்சியின் கீழ் இருந்த சில பகுதியும் இந்நான்கு பிரிவுடன் சேர்க்கப்பட்டு (மருதங்கேணி) வடமராட்சி கிழக்கு A.G.A பிரிவாக அமைக்கப்பட்டு இயங்குகிறது. ஆரம்பத்தில் பளைப்பகுதியின் கிழக்கே A9 வீதிக்கருகில் தர்மக்கேணியில் இருந்த தென்னைப் பயிர்செய்கை சபைக் கட்டிடத்தில் இயங்கிய மணியகாரன் கந்தோர் பளை நகரின் மத்தியில் உள்ள ( P.W.D) பெருந்தெருக்கள் திணைக்கள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் D.R.O பிரிவாக மாற்றம் பெற்றது. பின் இவ் அலுவலகம் இரட்டைக்கேணி அம்மன் கோயிலுக்கு கிழக்கே A9 வீதிக்கு அருகில் இருந்த ஆசைப்பிள்ளையார் வீட்டிற்கு மாற்றப்பட்டது. சிறிது காலத்தின் பின் மீண்டும் பளை புலோப்பளை வீதியில் புலோப்பளை வீதியில் புகையிரத வீதிக்கு அண்மையில் வீதியின் மேற்கு பக்கமாக இருந்த முதலியார் முத்துத்தம்பியின் வீட்டிற்கு மாற்றப்பட்டது.அதன் பின் இவ் அலுவலகம் அதன் எதிரே வீதியின் கிழக்கே இருந்த முருகேசம்பிள்ளையர் வீட்டிற்கு மாற்றப்பட்டது.இக்காலத்தில் A.G.A அலுவலகத்திற்கும் A.G.A தங்கும் விடுதிக்கும் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் பளை பொலிஸ் நிலையம் இயங்க ஆரம்பித்தமையால் தொடர்ந்தும் இவ் அலுவலகம் தனியார் வீட்டிலேயே இயங்கியது. 1974 இல் A.G.A அலுவலகத்திற்கு வாங்கிய காணியில் A9 வீதிக்கு அண்மையில் 1977 இல் அத்திவாரம் இடப்பட்டு 1983 இல் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு இயங்கத்தொடங்கியது. கடந்தகால யுத்தத்தால் பச்சிலைப்பள்ளியில் 07 இடப்பெயர்வுகள் ஏற்பட்டன. இதில் 2 இடப்பெயர்வுகள் நீண்டகால இடப்பெயர்வுகளாக உள்ளன. அதில் (2000-03-26 தொடக்கம் 2002-04-20 வரையான) இரு வருடங்களும் மற்றது 2006-08-11 தொடக்கம் 2010-01-01 வரையான நான்கு வருடங்களுமாக உள்ளது. 2000-2002 ஆம் ஆண்டு இடப்பெயர்வு காலத்தில் A.G.A அலுவலகம் புலோலிப்பகுதியிலும், யாழ்ப்பாணப்பகுதியிலும் வாரத்தில் இரு பிரிவாக இயங்கியது. இக் காலப்பகுதி மீள்குடியேற்றத்தின் போது 2002-04-20 ம் திகதி தொடக்கம் பளை புலோப்பளை வீதியில் உள்ள க.சிவஞானசுந்தரம் (D.P.M.C) வீட்டில் தற்காலிகமாக இயங்கியது. அதில் இருந்தவாறே இடிந்த கட்டிடப்பகுதியில் அக்கட்டிடம் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் 2003ல் கட்டத்தொடங்கி 2005 இல் இயங்க ஆரம்பித்தது. மீண்டும் 2006-08-11இல் ஏற்பட்ட இடப்பெயர்வு நீண்ட இடப்பெயர்வாகவும் வன்னிப்பகுதியை நோக்கிய இடப்பெயர்வாகவும் இருந்தமையால் A.G.A அலுவலகம் பரந்தன் சந்திக்கு அண்மையில் குமரபுரத்திலும் அதன் பின் கிளிநொச்சி திருநகர் பகுதியிலும் அதன் பின் கண்டாவளையிலும் பின் தர்மபுரத்திலும் பின் சுதந்திரபுரத்திலும் அதன் பின் வன்னி மக்கள் 2009 இன் பின் செட்டிக்குளம் மெனிக்பாம் போன்ற பகுதிகளிலும் வவுனியாவிலும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கிய காலத்தில் A.G.A அலுவலகம் வவுனியாவிலும் இயங்கியது. (2000-03-26)-(2000-04-23) இடப்பெயர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கிழக்கு கரையோரத்தின் ஒரு பகுதியினர் வன்னி நோக்கியும் மற்றையோர் தென்மராட்சி,வடமராட்சி,வலிகாமம்,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் இரு வருடங்கள் இருக்கவேண்டி ஏற்பட்டது. 2010-01-01 இல் மீள்குடியேற்றத்தின் பின் யுத்தத்தால் சேதமடைந்திருந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் இயங்கியது.கட்டிடம் மீண்டும் புனரமைக்கப்பட்டு 2012-09-24 ல் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு இன்றுவரை இயங்கி வருகின்றது. இன்று பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவு கிளி/78 கோயில்வயல், கிளி/79 இயக்கச்சி, கிளி/80 முகாவில், கிளி/81 மாசார், கிளி/82 சோறன்பற்று, கிளி/83 தர்மக்கேணி, கிளி/84 புலோப்பளை, கிளி/85 முல்லையடி, கிளி/86 தம்பகாமம், கிளி/87 பளைநகரம், கிளி/88 புலோப்பளை மேற்கு, கிளி/89 அல்லிப்பளை, கிளி/90 கச்சார்வெளி, கிளி/91 அரசர்கேணி, கிளி/92 இத்தாவில், கிளி/93 முகமாலை, கிளி/94 வேம்பொடுகேணி, கிளி/95 கிளாலி ஆகிய 18 பிரிவுகளை (கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை) உள்ளடக்கி இயங்கி வருகின்றது. இதன் எல்லைகளாக வடக்கே தொண்டமன்னன் ஆற்றின் பெரும்பகுதியையும் வடமராட்சி கிழக்கு A.G.A பிரிவையும் தெற்கே கிளாலி, அல்லிப்பளை, புலோப்பளைக்கடலின் மையப்பகுதியையும் பூநகரி, கண்டாவளை A.G.A பிரிவையும் கிழக்கே மான் பாய்ந்த வாய்க்காலையும் வடமராட்சி கிழக்கு A.G.A பிரிவையும் ஆனையிறவு கடலையும் கொம்படிவடக்கு பகுதியையும் கண்டாவளை A.G.A பிரிவையும் மேற்கே எழுதுமட்டுவாழ் பகுதியையும் எழுதுமட்டுவாள் கிளாலிப்பகுதியையும் தென்மராட்சி A.G.A பிரிவையும் எல்லையாக கொண்டமைந்து காணப்படுகிறது.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||














