இரண்டாம் கட்ட கொடுப்பனவிற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களும் ஏற்கனவே விண்ணப்பித்து எண்ணீட்டிற்கு உட்படாதவர்களும் விண்ணப்பிக்க முடிவதுடன் இதற்குரிய விண்ணப்பப்படிவங்களை கிராம மட்ட உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் நிகழ்நிலை மூலம் www.wbb.gov.lkஎன்ற இணையத்தளத்தினூடாகவும் மேற்கொள்ள முடியும். இறுதித் திகதி 15.03.2024.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16.02.2024) கிறிசலிஸ் நிறுவனத்தினரால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் பிரதேச செயலாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

வேம்பொடுகேணி, முகமாலை ஆகிய கிராமங்களில் மீள்குடியமரவுள்ள மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 05:02:2024 ன்று மு.ப 10 மணியளவில் இடம்பெற்றது.
இதில் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர்,உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், தேசிய கண்ணிவெடி அகற்றல் அமைப்பு அலுவலர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராமமட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக திரு.இ.த.ஜெயசீலன் அவர்கள் 09.02.2024 இன்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சமுர்த்தி வர்த்தக சங்க தெரிவானது சமுர்த்தி முகாமையாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் 05.02.2024 மு.ப 10.30 மணிக்கு நடைபெற்றது.

Scroll To Top