பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம் HALO Trust நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையமான முகமாலையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் HALO Trust நிறுவனத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 

 இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன்விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி. K. ஹேமலோஜினி தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு விரிவுரையாளரும் சைவப் புலவருமாகிய S. முகுந்தன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு விரிவுரையாற்றியிருந்தார். இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள்,ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending Plastic Pollution என்பதாகும். அந்தவகையில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பிரதேச செயலகம் பச்சிலைப்பள்ளியின் ஏற்பாட்டில் முகமாலை கிராம சேவையாளர் , இயக்கச்சி கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்ற சிரமதானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 

எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை மேற்கொள்ளல் மற்றும் முதியோர் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றிற்கான நடமாடும் சேவையானது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேசசெயலர் தலமையில்காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இன்றைய தினம் (05.06.2025) பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ் நடமாடும் சேவையில் விருந்தினர்களாக திரு.ப. பிரபாகர் (பிரதிப்பதிவாளர் நாயகம் வடக்கு வலயம் யாழ்ப்பாணம் )திரு.ப சர்மிலன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் கிளிநொச்சி ) திருமதி. த. வாசுகி (இணைப்பாளர் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் கிளிநொச்சி) , உதவி பிரதேச செயலாளர், பதிவாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இவ் நிகழ்வானது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் சிறந்த சேவையை வழங்கியமை சிறப்பிற்குரியது இதில் 57 கோவைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன குறித்த நிகழ்வில் வைத்து 14 பிறப்பு சான்றிதழும் இரண்டு இறப்பு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒரு விவாகப் பதிவும் இடம் பெற்று விவாக சான்றிதழும், முதியோர் அடையாள அட்டைளும் வழங்கி வைக்கப்பட்டது .

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Scroll To Top