"மிதிவெடி அபாயத்திலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்போம்" எனும் தலைப்பில் கிராம மட்ட அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 20.11.2023 அன்று நடைபெற்றது.
இதில் வளவாளராக Hello Trust நிறுவனத்தின் சமூக தொடர்பாடல் அதிகாரி திரு A.A.குணசீலன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ச.குணஜா தலைமையில் 15.11.2023 புதன்கிழமை அன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையை மாகாண சமூக சேவைகள் திணைக்களம், FAIRMED, அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவனம் மற்றும் மக்கள் வங்கி என்பன வழங்கியிருந்தன.
இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், FAIRMED நிறுவன பிரதிநிதிகள், விசேட கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பால் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட உளநல சங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அவ்வாறான வேலைத்திட்டங்களில் தொடர்ச்சியாக கிராம மட்டத்தில் காணப்படுகின்ற கிராமிய அமைப்புக்களின் நிர்வாகப் பிரிவினருக்கு பால்நிலை சமத்துவம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கு Gender sensitivity training for village leaders எனும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று(09.11.2023) காலை 10.00 தொடக்கம் மதியம் 1.30 வரை முல்லையடி கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தம்பகாமம், தர்மக்கேணி, முல்லையடி, சோரன்பற்று, இயக்கச்சி, பிரிவுகளைச் சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த மக்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் பங்குபற்றினர். மேலும் இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.ரதிதேவி அவர்கள் கலந்து கொண்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச மட்ட வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கால அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(13.11.2023) திங்கட்கிழமை நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா பருவமழை மற்றும் இதனால் பிரதேசத்தில் எதிர்வுகூறக் கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.தொடர்ந்து, உள்ளூராட்சிமன்ற அதிகார சபை ரீதியான அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் பிரதேச செயலக பிரிவின் திட்ட நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், வடகீழ் பருவப் பெயர்ச்சி பருவ மழையின்போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக, துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.குறிப்பாக வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக கால்வாய்களை மீள் செப்பனிடல் மற்றும் கட்டாக்காலி மாடுகள், நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.

உளநல தினத்தையொட்டி அலுவலர்களுக்கு மகிழ்ச்சியான குடும்பம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிளிநொச்சி மாவட்ட தாய் சேய் நல வைத்திய அதிகாரி திரு க.ரஞ்சன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.

Scroll To Top