வேம்பொடுகேணி, முகமாலை ஆகிய கிராமங்களில் மீள்குடியமரவுள்ள மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 05:02:2024 அன்று மு.ப 10 மணியளவில் இடம்பெற்றது.
இதில் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர்,உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், தேசிய கண்ணிவெடி அகற்றல் அமைப்பு அலுவலர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராமமட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















