நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சிநெறி ஆரம்பநிகழ்வானது 08.11.2023 இன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.ச.குணஜா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் வளவாளராக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளவாளரான திரு வே.தமிழ்ச்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார்.















