பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தெரிவு செய்வதற்கான பிரதேச மட்ட கலந்துரையாடலானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 31.01.2024 மாலை 4 மணிக்கு கௌரவ கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழ தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்,மற்றும் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர்,ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் மற்றும் அலுவலர்கள்,கிராமஅலுவலர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் 2024 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது















