2024ம் ஆண்டிற்கான புதுவருடத்தின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.தேசியக் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூரும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான தமது கடமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலாளர் அவர்கள் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், குறித்த குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் உரையாற்றினார்.















