தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியில் எமது அலுவலகம் தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.கடந்த காலத்தில் நாம் அர்ப்பணிப்பாகவும் வினைத்திறனாகவும் சேவை வழங்கியதற்காக தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் விருதுகள் - 2020 போட்டித்தொடரில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளோம். இது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெறுபேறாகும்.இச் சந்தர்ப்பத்தில் நாம் அலுவலகத்தில் செய்த சிறிய சிறிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிய பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 அலுவலர்கள் குழு மனப்பான்மையோடு அர்ப்பணிப்பாக ஆற்றிய சேவைக்கு கிடைத்த மதிப்பாக 15.12.2022 அன்று அலரி மாளிகையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இவ் வெற்றிப்பயணத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Productivity award 2020 Productivity award 2020 1 Productivity award 2020 2

Productivity award 2020 3 Productivity award 2020 4 Productivity award 2020 5
Scroll To Top