பசுந்துளிர் இதழ் - 08 நூல் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (21.12.2023) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு சிறப்புற நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் மற்றும் கலாசாரப் பேரவையின் வெளியீடான பசுந்துளிர் இதழ் - 08 நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் ஆய்வுரையினை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நூலகரும் கவிஞருமான வே. லவேந்திரா நிகழ்த்தினார்.

பிரதேச கலைஞர்கள் கலைத்தென்றல், இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.தேசிய கலை இலக்கிய போட்டிகள் மற்றும் பிரதேச மட்ட திருக்குறள் போட்டி, பிரதேச மட்ட மாண்புறு மாணவர் சமுதாய திறன் விருத்திப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந் நிகழ்வில் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
21cultural1 21cultural2 21cultural3
 
21cultural5 21cultural7 21cultural4
Scroll To Top