பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ச.குணஜா தலைமையில் 15.11.2023 புதன்கிழமை அன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையை மாகாண சமூக சேவைகள் திணைக்களம், FAIRMED, அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவனம் மற்றும் மக்கள் வங்கி என்பன வழங்கியிருந்தன.
இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், FAIRMED நிறுவன பிரதிநிதிகள், விசேட கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டது.

15dis1 15dis3 15dis2

15dis4 15dis5 15dis6

Scroll To Top